ரயில்வே துறைக்கு சொந்தமான இடத் தில் ஆக்கிரமிப்பு கடையை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டம் !
திருப்பத்தூர் ,ஏப்ரல்.25-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள ரயில்வே துறைக்கு சொந் தமான இடத்தில் அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு ஆக்கிரமித்து கடை கட்டி கேரள மாநிலம், மல்லபுரம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் முகமது கோயா என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். மேலும் அதே கட்டிடத்தில் ஒரு பகுதியாக திமுக கொடிக்கம்பம் அமைப்பதற்காக இடத்தை கொடுத்ததாகவும் அதன் அடிப் படையில் திமுகவினர் கொடிக்கம்பம் அமைத்துள்ளனர். மேலும் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டும் போது ரயில்வே துறை அதிகாரிகள் எச்சரித்தும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அந்த இடத்தை கண்டு கொள்ளாதீர்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ரயில்வேத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கில் 2024 ஆம் ஆண்டு ஜூலை 31 ம் தேதி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில் கடையை காலி செய்ய கடந்த 14ஆம் தேதி சம்பந்தப்பட்ட சேகருக்கு ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், அதனை கண்டு கொள்ளாத நிலையில் இன்று ரயில் வேத்துறை உதவி பொறியாளர் நிர்மல்குமார் தலைமையில் ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வருவாய் துறையினர் முன்னிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடையை ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்து தள்ளினர். இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பகுதி மக்கள் மற்றும் வணிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது.மேலும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை வாடகைக்கு எடுக்கப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது கோயாவு க்கு தகவல் தெரிவிக்கவில்லை எனவும் திடீரென கடை இடித்து தள்ளப்பட்டதால் வியாபாரம் பாதிக்கப்படுவதுடன் மாற்று ஏற்பாடு செய்வது அறியாமல் திகைத்து நின்றார்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக