ஏப்.26- தூத்துக்குடி முத்தையாபுரம் அடுத்த அத்திமரப்பட்டி பகுதியில் உள்ள கடந்த ஏப்.24ம் தேதி அன்று இசக்கியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்று வந்தது.
இந்த விழாவின் போது, அதே பகுதியைச் சேர்ந்த விக்கி (20) என்ற வாலிபர் மதுபோதையில் அங்கிருந்த மகாராஜா (18) என்பவரிடம் வீண் தகராறு செய்து அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்ட மகாராஜாவின் உறவினர் சதீஸ்குமார் (29), விக்கியைக் கண்டித்து தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்கி, தனது நண்பர் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த மரியா தினேஷ் மற்றும் விக்னேஷ் கோவன்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் ஆகிய மூன்று பேரைச் சம்பவ இடத்திற்கு வரவழைத்து அவர்கள் அரிவாளால் சதீஸ்குமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் போலீஸார் மரியா தினேஷ், விக்னேஷ், ஸ்ரீதர் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக