ஸ்ரீவைகுண்டம் ஏப்ரல் 14. நவதிருப்பதிகளில் முதலாவதான கள்ளப்பிரான் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் முன்னிட்டு 4 கருடசேவை நடந்தது. காலை நம்மாழ்வார் மங்களாசாசனம்.
மாலை ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் நத்தம் எம்இடர்கடிவான் திருப்புளிங்குடி காய்சினி வேந்தப் பெருமாள் ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்றபிரான் மற்றும் நம்மாழ்வார் ஸ்ரீவைகுண்டம் எழுந்தருளி திருமஞ்சனம் நடந்தது.
இரவு 7 மணிக்கு அனைத்து பெருமாள் களும் கருட வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் அலங்கரிக்கப்பட்டு இரவு 11 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
பின்னர் மாடவீதி ரதவீதி புறப்பாடு நடைபெறுகிறது. மேடைப் பிள்ளையார் கோயில் முன் 4 கருட வாகனம் நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் ஒரே வரிசையில் காட்சி தந்தனர். விடியற்காலை 3 .30 மணிக்கு கோவில் வந்தடைந்தார்.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் வாசு. ராமானுஜன்.சீனு. கண்ணன். விவேக். கோபாலகிருஷ்ணன். ராஜகோபாலன். சுந்தர்ராஜன். ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி சீனிவாசன் தேவராஜன் சீனிவாசன் கண்ணன்.வெங்கடேசன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் எழுத்தர் இசக்கிபாண்டி. உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏப்ரல் 17 ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக