8 சட்ட மன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் நிறை வடைந்தது இன்று காலை மனு பரிசீலனை தொடக்கம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 ஏப்ரல், 2026

8 சட்ட மன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் நிறை வடைந்தது இன்று காலை மனு பரிசீலனை தொடக்கம் !

8 சட்ட மன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் நிறை வடைந்தது இன்று காலை மனு பரிசீலனை தொடக்கம் !
திருவண்ணாமலை , ஏப்ரல் 7 -
  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில், மொத்தம் 242 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்செய்து ள்ளனர்.வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற உள்ளது.தமிழக சட்ட மன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, கடந்த 30ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கி, நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திரு வண்ணாமலை, செங்கம்(தனி), கிழ்பென் னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி(தனி) ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல், அந்தந்த தொகுதிகளில் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் நடந்தது.இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் தொடங்கியதிலிரு ந்து கடைசி நாளான நேற்று 242 பேர் மனுதாக்கல் செய்தனர். அதன்படி, திரு வண்ணாமலை தொகுதியில் 35, செங்கம் தொகுதியில் 36 கீழ்பென்னாத்தூர் தொ குதியில் 37, கலசபாக்கம் தொகுதியில் 30, போளூர் தொகுதியில் 30, ஆரணி தொகு தியில் 30, செய்யாறு தொகுதியில் 23, வந்தவாசி தொகுதியில் 21 வேட்பாளர் கள் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று வரை மொத்தம் 242 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில் அதிகபட்ச மாக கீழ்பென்னாத்தூரில் 37 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்த க்கது. மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்களின் பெயரில் உள்ள சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் மனு தாக்கல் செய்துள்ளனர்இந்த நிலையில், வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. அதில், வேட்பாளர்கள் அல்லது அவரது முகவர்கள் நேரில் கலந்து கொள்ளலாம். சம்மந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். தகுதியில்லாத, முறையாக பூர்த்தி செய்யாத, சட்டப்பூர்வ ஆட்சேபனைக்கு உரிய வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். தேர்தல் ஆணைய விதிமுறைக்கு உட்பட்டு, தகுதி யுள்ள மனுக்கள் ஏற்கப்படும். அதன் விபரம்இன்று மாலை 3 மணிக்குதொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளி யிப்படும். வேட்புமனுக்களை வாபஸ் பெற வரும் 9ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை 3 மணிக்கு வேட்பாளர் களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியி டப்படும்  என தெரிவித்தனர்.

மாவட்ட செய்தியாளர் கலையரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad