சாத்தான்குளம் - தந்தை மகன் ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கு தீர்ப்புக்கு தமிழ்நாடு வணிகர் சங்கம் பாராட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 ஏப்ரல், 2026

சாத்தான்குளம் - தந்தை மகன் ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கு தீர்ப்புக்கு தமிழ்நாடு வணிகர் சங்கம் பாராட்டு.

சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் பென்னிக்ஸ் கொ*லை வழக்கு தீர்ப்புக்கு தமிழ்நாடு வணிகர் சங்கம் மனதார பாராட்டுகிறது.

தீர்ப்பு குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கம் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: வழக்கு பதிவு செய்து ஒருவரை சிறைச்சாலையில் அடைக்கும் முன் அவர் நலமுடன் இருக்கிறார் என்று டாக்டரும் அதை உறுதிசெய்யும் நீதிபதியும் தவறு இழைத்திருக்கின்றார்கள் என்பதுதான் மக்களுடைய கருத்து என்றும்,

அதனை எப்படி கோர்ட் கவனிக்க தவறியது என்ற மக்களுடைய கேள்வி இன்று எல்லா இடங்களிலும் பிரதிபலிக்கின்றன. 

எது எப்படியோ இந்த தீர்ப்பு வருவதற்கு காரணமாக இருந்த பெண் காவலர் ரேவதி அவர்களுக்கும், செவிலியர் அவர்களுக்கும், உண்மையை உரக்கச் சொன்ன சாட்சிகள் அனைவருக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் ராயல் சல்யூட் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். 

உண்மையை தைரியமாக சொன்ன பெண் காவலர் ரேவதி அவர்களுக்கு அரசு விருது வழங்கி பதவிஉயர்வு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை வைக்கின்றது.

அதே நேரத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கம் காவல் துறையினரை எப்போதும் மதிக்கின்றவர்கள். காவலர் இல்லையேல் வணிகர்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஆனால் இங்கே வேலியே பயிரை மேய்கிறது, பசுத்தோல் போர்த்திய புலியாக இருக்கின்றவர்களுக்கு தக்க தண்டனை வழங்கிய தீர்ப்புக்கும், அதனை திறம்பட வழங்கிய நீதியரசர்க்கும், தமிழ்நாடுவணிகர் சங்கம் தலை வணங்குகிறது. 

இந்ததீர்ப்பு இதுபோன்ற கயவர்களுக்கு எடுத்துகாட்டாக இருக்கட்டும், இனி எந்த ஒரு தீயவனும், தீங்கு இழைக்காதிருக்கட்டும். இத்தீர்ப்பின் மூலமாக என்று தமிழ்நாடு வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad