தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதன் கோவிலில் கருடசேவை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 ஏப்ரல், 2026

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதன் கோவிலில் கருடசேவை.

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதன் கோவிலில் கருடசேவை.

தென்திருப்பேரை, ஏப்ரல் 6, தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் எட்டாவதான தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதன் கோவிலில் பங்குனி உற்சவம் கருடசேவை நடந்தது. 

காலை 6 மணிக்கு விஸ்வரூபம். 7.30 மணிக்கு நித்தியல் ‌ நடந்தது. 7.45 மணிக்கு தோளுக்கினியானில் மாடவீதி ரதவீதி புறப்பாடு நடைபெற்றது. 4 மணிக்கு நாலாயிர திவ்வியப் பிரபந்தம். சாத்துமுறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 

மாலை 5.30 மணிக்கு சாயரட்சை. 7 மணிக்கு வாகன குறட்டிற்கு எழந்தருளி உற்சவர் நிகரில் முகில் வண்ணன் கருட வாகனத்திலும் தாயார் திருப்பேரை நாச்சியார் அன்ன வாகனத்திலும் அலங்கரிக்கப்பட்டு 9.50 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

பின்னர் மாடவீதி. ரதவீதி சுற்றி வந்தது. தினசரி மாலை 7.30 மணிக்கு யானை. இந்திய விமானம். குதிரை வாகனங்களில் புறப்பாடு நடைபெறும். ஏப்ரல் 9 ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் திருவேங்கடத்தான். ராகுல். நிர்வாக அதிகாரி அஜித். ஆய்வாளர் நம்பி. அறங்காவலர் குழுத் தலைவர் மகரபூஷணம். உறுப்பினர்கள் மாரிதுரைசாமி கணேசன். 

பாக்கியராஜ், வளர்மதி. கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி. உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad