இரட்டைத் திருப்பதி தொலை வில்லிமங்கலம் கும்பாபிஷேகம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 ஏப்ரல், 2026

இரட்டைத் திருப்பதி தொலை வில்லிமங்கலம் கும்பாபிஷேகம்.

இரட்டைத் திருப்பதி தொலை வில்லிமங்கலம் கும்பாபிஷேகம். ‌

ஸ்ரீவைகுண்டம் ஏப்ரல் 6 தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் நான்காவதான தொலைவில்லிமங்கலம் அரவிந்தலோச்சனர் கோவிலில் கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்ற திருப்பணி வேலைகள் நிறைவு பெற்றது. 

கடந்த ஏப்ரல் 2 ந்தேதி முதல் ஹோமகுண்ட பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேகம் முன்னிட்டு காலை 5 மணிக்கு விஸ்வரூபம். 7 மணி முதல் 8 வரை ஹோமம் 8.30 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது. 

9.15 மணிக்கு தீர்த்த குடங்கள் பிரகாரம் சுற்றி விமானம். மூலவர். உற்சவர். விஸ்வக்சேனர். ஆழ்வாராதிகள். சன்னதி கருடன் மதில் கருடன் இருப்பிடங்கள் சென்றன. 9.55 மணிக்கு கும்பாபிஷம் சர்வசாதகம் கோவிந்தன்பட்டர். ரமேஷ் பட்டர். தல அர்ச்சகர்கள் சுந்தர்ராஜன். ரகு ஆகியோர் நடத்தினர். 

பின்னர் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் அரையர் சம்பத்‌ ஸ்வாமி ஆத்தான் வடக்கு திருமாளிகை கண்ணன் ஸ்வாமி. ஆத்தான் கீழத்திருமாளிகை ராமானுஜன் ஸ்வாமிகள் தலைமையில் சேவித்தனர். சாத்துமுறை முடிந்து தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் ஸ்ரீதர். சந்தானம். வாசு. அறநிலைய துறை இணை ஆணையர் ரோசாலி சுமிதா நிர்வாக அதிகாரிகள் வள்ளிநாயகம் கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன் என்ற ராமானுஜம் உறுப்பினர்கள் ராமலட்சுமி காளிமுத்து பொன்ராஜ் கன்னிராஜா. திருப்பணி வைஸ் பிரசிடெண்ட். செல்வம் சீனிவாசசேவை 

அறக்கட்டளை கள அதிகாரி பாபு. பூஜை நிர்வாகம் பரகாலசிங்கன். பொறியாளர் பிரகாஷ். கார்த்தி. கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி . உட்பட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை வேணுகோபால சுவாமி கைங்கரியம் டிரஸ்ட் . மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad