2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜீன் 14 ஆம் தேதி வரை (இருநாட்களும் உட்பட) 61 நாட்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது - மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன்.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி நகரம் வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜீன் 14 ஆம் தேதி வரை (இருநாட்களும் உட்பட) 61 நாட்கள் கால அளவில் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜீன் 14 ஆம் தேதி வரை (இருநாட்களும் உட்பட) 61 நாட்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள மேற்குறிப்பிட்ட காலங்களில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தினுள் மீன்பிடி தொழில் சாராத நபர்கள் வருகை தருவதை தவிர்த்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக