ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் கருடசேவை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 24 ஏப்ரல், 2026

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் கருடசேவை.

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் கருடசேவை.

ஏப்ரல் 24. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்பதாவதான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கடந்த ஏப் 19 தேதி சித்திரை பிரம்மோற்சவம் துவங்கியது.

ஐந்தாம் திருவிழா முன்னிட்டு நேற்று கருடசேவை நடந்தது. காலை 5 மணிக்கு விஸ்வரூபம். 7.10 மணிக்கு நித்தியல். 8.30 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்றபிரான் மாடவீதி ரதவீதி புறப்பாடு நடந்தது. 10.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். நாலாயிர திவ்வியப் பிரபந்தம். சாத்து முறை தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 

மாலை 5 மணிக்கு சாயரட்சை. 6.30 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்றபிரான் மற்றும் நம்மாழ்வார் இருவரும் வாகன மண்டபம் எழுந்தருளினார். பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு உற்சவர் பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் இரவு 8.00 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி தந்தார். 

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் சுவாதி. கண்ணன். விவேக். எம்பெருமானார் ஜீயர். நிர்வாக அதிகாரி சதீஷ். ஆய்வாளர் நம்பி. கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

வருகின்ற ஏப்ரல் 27 ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad