மாநில அளவிலான குறும்பட போட்டி, சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெற்றி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 ஏப்ரல், 2026

மாநில அளவிலான குறும்பட போட்டி, சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெற்றி.

மாநில அளவிலான குறும்பட போட்டியில், சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி மாணவர்கள்  வெற்றி.

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தில், உள்ள டாக்டர். ஜி.யு .போப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தமிழ்நாடு அரசு மற்றும் தகவல் பொது தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான குறும்படம் போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான வெற்றியாளர்களாக தேர்வாகி உள்ளனர். 

அதற்கான விருதினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கினார். 

மாணவர்களின் படைப்பாற்றல் சமூக விழிப்புணர்வு மற்றும் தொழில்நுட்ப திறமையை வெளிப்படுத்திய இந்த சாதனை, தூத்துக்குடி மாவட்டத்திற்கும், கல்லூரிக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. 

வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் ந. ஜெயக்குமார் சந்தோஷ் கல்லூரி முதல்வர் டாக்டர் .ஜே.ஜாஃபிந்த் மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், வெற்றி பெற்ற மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad