ஸ்ரீவைகுண்டம், மே.21 தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவ திருப்பதி தலங்களில் 9வது தலமாகவும் குருவுக்கு அதிபதியாகவும் விளங்கும் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில், சுவாமி நம்மாழ்வார் வைகாசி மாதம் விசாகம் அன்று அவதரித்ததை முன்னிட்டு வைகாசி திருவிழா வெகு விமரிசையாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு வைகாசி திருவிழா மே 21 ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இன்று காலை 4 மணிக்கு விஸ்வரூபம். 5 மணிக்கு திருமஞ்சனம். 7.45 மணிக்கு கொடிப்பட்டம் மாட வீதி சுற்றி வந்தது. காலை 8 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. அர்ச்சகர் கண்ணன் கொடியேற்றினார்.
தினமும் காலை ஸ்வாமி நம்மாழ்வார் தோளுக்கினியானில் புறப்பாடும் மாலை 6 மணிக்கு இந்திர விமானம். புஷ்ப பல்லக்கு. புன்னைமரம். தங்க திருப்புளி. ஆகிய வாகனங்களில் சுவாமி வீதி புறப்பாடு நடைபெறுகிறது.
மே மாதம் 25ம் திங்கள்கிழமை 5ம் நாள் விழாவான அன்று மங்களாசாசனம், முன்னிட்டு காலை 9 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்துடன் நவதிருப்பதி பெருமான்களை வரவேற்க கொடி, குடை, ஆலவட்டம், பதாகைகள், திருச்சங்கு போன்றவைகளுடன் யானைகள் முன்வர ஊர்வலமாக பூப்பந்தல் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
நவதிருப்பதி பெருமாள்களையும் மங்களாசாசனம் பெற்று மதுரகவி ஆழ்வார்ருக்கு அதனை வழங்குகிறார். அன்று இரவு 10.30 மணிக்கு 9 கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கருடசேவை நிகழ்ச்சியில் நவதிருப்பதி உற்சவர்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சின வேந்தன், இரட்டை திருப்பதி அரவிந்தர லோசனர், தேவர் பிரான், பெருங்குளம் மாயக்கூத்தர், தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆகியோர் கருட வாகனத்தில் குடவருவாயிலில்
தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நம்மாழ்வார் அன்னவாகனத்திலும் மதுரகவி ஆழ்வார் தங்க பல்லக்கிலும் கருடவாகனங்களுடன் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அடுத்த நாள் முதல் யானை. வெள்ளி சந்திர பிரபை. குதிரை. பல்லக்கு. வெட்டிவேர் சப்பரம் ஆகியவற்றில் வீதி உலா நடைபெறுகிறது.29ம் தேதி வெள்ளிகிழமை 9ம் நாள் திருவிழாவில் காலை 7.15 மேல் 7.45 மணிக்குள் நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளுகிறார்.
அதை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலமும் நடைபெறுகிறது. 30ம் தேதி சனிக்கிழமை 10 ம் நாள் திருவிழாவான தீர்த்தவாரி தாமிரபரணி நதியில் காலையில் நடக்கிறது.
நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் விவேக். சுவாதி. பாலாஜி கோவில் செயல் அலுவலர் சதீஷ், ஆய்வாளர் நம்பி, அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம்(எ) கணேசன். உறுப்பினர்கள் காளிமுத்து, ராமலட்சுமி, பொன்ராஜ், கன்னிராஜா கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக