இந்தியன் வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு மற்றும் பீட்ஸ் நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கான பயிற்சி சான்றிதழ் வழங்கல் !
திருப்பத்தூர் , மே 21
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதி ராமக்காபேட்டையில் உள்ள பீட்ஸ் தொண்டு நிறுவன அலுவலகத்தில் இந்தியன் வங்கி கிராமபுற உயர் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனம் மாற்றும் பீட்ஸ் தொண்டு நிறுவனம் இணைந்து மகளிர் சுய உதவி குழு பெண்கள் மற்றும் தேனி வளர்ப்பு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி முடித்தோ ருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது
மேலும் இந்தியன் வங்கி மூலம் தொழில் கடன் இணைப்பு செய்வதற்கான ஏற் பாடுகள் குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் இந்திய நாட்டின் கிராமப்புற சுய வேலை வாய்ப்பு டைரக்டர் கணேசன், மாவட்ட தொழில் மையம் ஜெனரல் மேனேஜர் ரமேஷ், ஆகையோர் கலந்து கொண்டனர் அவர்களை பீட்ஸ் தொண்டு நிறுவன செயலாளர் ராதா மற்றும் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் சங்கர் ஆகியோர் வரவேற்றனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக