அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் குடிநீர் குழாய் பதிப்பு வேலை முடிந்து சரி செய்யாமல் இருக்கும் தார் சாலை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 26 மே, 2026

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் குடிநீர் குழாய் பதிப்பு வேலை முடிந்து சரி செய்யாமல் இருக்கும் தார் சாலை !

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் குடிநீர் குழாய் பதிப்பு வேலை முடிந்து சரி செய்யாமல் இருக்கும் தார் சாலை !
ராணிப்பேட்டை,மே 26 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இடையில் குடிநீர் பைப் லயன் பதிப்பதற் காக  ஒரு மாதத்திற்கு முன்பு தோண்டப் பட்ட பள்ளம் தற்போது வரை அதை சரி செய்யாமல் பைப்பும் புதைக்காமல் நோண்டிவிட்டு அப்படியே சென்று இருக்கின்றனர் ஒரு மாதத்திற்கு முன்பு நோண்டப்பட்டது தற்போது அங்கு எதிரில் அரசினர்கள் மேல்நிலைப்பள்ளி இருக்கிறது அங்கு வரும் பொதுமக்கள் அனைவருமே சிரமப்படுகின்றனர்  பள்ளி திறக்கும் தருணத்தில் பள்ளி மாணவர் களின் நலன் கருதி உடனடியாக சரி செய்ய வேண்டும் மற்றும் பகுதியில் நடைபாதை இல்லை அதனால் அந்த இடத்தில்தான் நடந்து செல்ல வேண்டும் அந்த நடைபாதையில் பள்ளங்கள் தோன்றியிருப்பதால் போக்குவரத்து நெரிசலில் ஏற்படுகிறது இன்னும் ஒரு வாரத்தில் பள்ளி திறக்கப்பட இருக்கிறது அதற்குள் இதை சரி செய்ய வேண்டும் சமூக ஆர்வலர்களின் சார்பிலும் சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கத்தின் சார்பிலும் அரசு அதிகாரி களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad