குடியேற்றம், அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை 05.06. 2026 அன்று முதல் தொடக்கம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 18 ஜூன், 2026

குடியேற்றம், அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை 05.06. 2026 அன்று முதல் தொடக்கம் !

குடியேற்றம், அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை 05.06. 2026 அன்று முதல் தொடக்கம் !
குடியாத்தம் , ஜூன் 18 -

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 5-6-2026 மாணவர் சேர்க்கை மற்றும் இடஒதுக்கீடு வழிமுறைகளின்படி, மீதமுள்ள 501 காலி இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தா ய்வு 22.06.2026 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான மின்னஞ்சல் மூலம் மாணவர் களுக்கு அனுப்பப்பட்டு, தொலைபேசி குறுஞ்செய்தி தகவலும் அளிக்கப்படுகி றது. இது தவிர இடஒதுக்கீடு வாரியான காலியிட விவரங்கள் கல்லூரி இணைய தளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.  இதில் 30.05.2026-க்கு பின்னர் 15.06.2026 முடிய இரண்டாம் கட்டமாக இணைய வழியில் விண்ணப்பம் சமர்ப்பித்தவர்கள் கலந்து கொள்ளலாம் காலியாக உள்ள இனச்சுழற்சி இடங்களுக்கு அரசு விதி களின்படி மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். இக்கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் காலை 09.30 மணிக்கு கல்லூரிக்கு வர வேண்டும்.இரண்டாம் கட்ட கலந்தாய்வு 22.06.2026 அன்று முதல் கீழ்காணும் பாடப்பிரிவுகளுக்கு நடை பெற உள்ளது.22.06.2026 : தமிழ் B.A. Tamil  Shift – I (T/M)ஆங்கிலம் B.A. English Shift – I – (E/M)வணிகவியல் B.Com Shift - I, (E/M), Shift – II (T/M, E/M),வணிக நிர்வாகவியல் BBA Shift – I & II  (E/M) கணிதவியல் B.Sc. Maths, Shift – I & II (T/M, E/M), இயற்பியல் B.Sc. Physics, Shift – I (T/M, E/M), வேதியி யல்  B.Sc. Chemistry, Shift – I & II (T/M, E/M),
தாவரவியல் B.Sc. Botany, Shift – I & II (T/M, E/M), வரலாறு B.A., History - Shift – I (T/M) மற்றும் பொருளியல் B.A., Economics Shift – I & II (T/M, E/M). தேவையான ஆவணங் கள் :- 1. இணைய வழியில் பதிவு செய்த விண்ணப்ப படிவம், 2. மாற்றுச்சான்றிதழ் அசல் மற்றும் நகல் 3. 10, 11, 12 ஆம் வகுப் பின் மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் நகல்  4. ஆதார் அட்டை 5. சாதி சான்றிதழ்
6. கடவுச்சீட்டு அளவு புகைப்படம் – 2
7. வங்கி புத்தக நகல் (Bank Pass Book Xerox) மேற்குறிப்பிட்ட ஆவணங்களை கலந்தாய்வில் பங்குபெறும் மாணாக் கர்கள் அவசியம் கொண்டு வருதல் வேண்டும். இக்கலந்தாய்வு அரசின் வழிகாட்டுதலின்படி, இடஒதுக்கீட்டின் மூலம் பின்பற்றி முறையாக நடைபெறும் என தெரிவிக்கலாகிறது. சென்ற முறை கலந்தாய்வில் கலந்து கொள்ள தவறிய மாணவர்களும் கலந்து கொள்ளலாம் என முனைவர்  ஜெ. எபெனேசர்  கல்லூரி   முதல்வர் தெரிவித்துள்ளார் .

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad