ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் இருசக்கர வாகன திருடியவர் கைது – 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 18 ஜூன், 2026

ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் இருசக்கர வாகன திருடியவர் கைது – 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் !

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகன திருடியவர் கைது – 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் !
திருப்பத்தூர்,  ஜுன் 18 -
திருப்பத்தூர் மாவட்டம்  ஆம்பூர்  அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங் களுக்கு முன்பு இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போனது. இது குறித்து நகர காவல் நிலையத்தில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை பிரிவினர் அரசு மருத்துவ மனையில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வாகன திருட்டில் ஈடு பட்டவர் வாணியம்பாடி உதேந்திரம் மசூதி இரண்டாவது வீதியைச் சேர்ந்த காதர் பாட்ஷா மகன் இம்ரான் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து நகர காவல் துறை போலீசார் இம்ரான் மீது வழக்குப் பதிவு செய்து, அவரது வீட்டில் இருந்த 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் மேலும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து அவனிடம் தொடர்ந்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad