ஆம்பூரில் உள்ள தனியார் ஏசி பாரில் மர்ம தாக்குதல், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி !
வாணியம்பாடி, ஜூன்.18-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனியார் ஏசி பாரில் மது அருந்த சென்ற ஹரிகிருஷ்ணன் என்பவர் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலை யில் மீட்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில் ஏற்பட்ட தகராறா அல்லது வேறு காரண மா என விசாரணை நடைபெற்று வருகி றது. பேருந்து நிலையம் மற்றும் பள்ளி அருகே செயல்பட்டு வரும் இந்த தனியார் மதுபான பாரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடை பெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக