12 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 21 ஜூன், 2026

12 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில !

12  வது  சர்வதேச யோகா  தினத்தை முன்னிட்டு அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில !
குடியாத்தம் , ஜூன் 21-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில் 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது  இந்த நிகழ்ச்சியில் 
புதுச்சேரியின் முன்னாள்  மற்றும் தெலுங்கான  மேதகு ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு  மன அழுத்தம்,மன அமைதி மற்றும் நல்ல இளமையுடன் நீண்ட காலம் வாழ யோகா பயிற்சி தினமும் செய்ய வேண்டும் என மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் எடுத்துரைத்தார்.கவுரவ விருந்தினராக ஆசீர்வாத் சர்வதேசப் பள்ளியின் நிறு வனர் மற்றும் தலைவர்  மஞ்சுநாத்  அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.மேலும் அத்தி கல்விக் குழுமத்தின் அறங்காவலர் டாக்டர் சௌ.சுகன்நாதன் அவர்கள் வெற்றி தோல்விகளை சமமாக ஏற்றுக் கொள்ள முறையான யோகா பயிற்சி வேண்டும் என கூறினார். மேலும் அத்தி மருத்துவமையின் தலைமை மருத்துவர்  மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ.சௌந்தரராஜன் அவர்கள் தந்தை தினத்தை முன்னிட்டு   குடும்ப தலை வரான தந்தை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வாழ யோகா பயிற்சி மிகவும் அவசியம் என தெரிவித்துக் கொண்டார். குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே.குமரவேல், அத்தி செவிலியர்  கல்லூரி முதல்வர் டாக்டர்  பால்ராஜ் சீனிதுரை  அத்தி கிளை தலை மை மருத்துவர் டாக்டர் ஆ.கென்னடி மற்றும் அத்தி மருத்துவமையின் நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர்கள்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அனைவரும் யோகாசனம் செய்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அதில் 300 க்கும்  மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இறுதியில் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் என்.மகேஷ் ராஜாமணி  அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad