கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்
பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்து, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை போதைப்பழக்கத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் உத்தரவின்பேரில் கடந்த மே 13ஆம் தேதி ஐந்து சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொலைநோக்கு பார்வை, துல்லியமான திட்டமிடல் மற்றும் உறுதியான தலைமையின் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களில் தனிப்படைகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் 18 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 கிலோ 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில் தொடர்புடைய 27 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், 17 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 253 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்மூலம், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 44 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், கணிசமான அளவிலான போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருட்கள் இல்லாத கன்னியாகுமரியை உருவாக்குவது காவல்துறையின் முக்கிய இலக்காகும். போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர். உறுதியளித்துள்ளார்.
போதைப்பொருட்களுக்கு எதிரான இந்த தொடர் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத கன்னியாகுமரியை உருவாக்க காவல்துறை உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக