கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் 9-வது வார்டைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்தனர்.
வட்ட செயலாளர் சசி தலைமையில், வட்ட பிரதிநிதிகள் குமாரவேல், நாகராஜன் மற்றும் வார்டு மகளிர் அணி இணைச் செயலாளர் ராஜேஷ்வரி உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து விலகி, தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் கிழக்கு மாவட்ட இணை செயலாளர் பிரேம் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்வில் இரணியல் லெட்சுமணன், 39-வது வார்டு எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கணேசன், பகுதி செயலாளர் ஐயப்பன், வெங்கடேஷ், வெங்கடாச்சலம், சுடலையாண்டி, விஜய், தீபக், ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் மாநகராட்சியின் 9-வது வார்டைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தது அப்பகுதியில் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக