அரசு பள்ளி மாணவர்களுக்கு விலை யில்லா சீருடை மற்றும் புத்தகங்களை வழங்கிய எம் எல் ஏ சிந்து !
மாணவர்களுக்கு சாக்லேட் மற்றும் மலர் கொடுத்து வரவேற்பு !
குடியாத்தம் ஜூன் 5
வேலூர் மாவட்டம் குடியாத்தம்,, கடந்த கல்வியாண்டில் தேர்வுகள் நடைபெற்று கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழகமெங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் துவக்கப்பட்ட நிலையில்
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சீவூர் ஊராட்சி கல்லூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பள்ளி தொடக்க முதல் நாளான இன்று பள்ளி தலைமை ஆசிரி யர் (பொறுப்பு) பாஸ்கர் தலைமையில் ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும் பள்ளியில் மாணவ ர்களுக்கு விலையில்லா சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட
குடியாத்தம் எம்எல்ஏ சிந்து பள்ளியின் முதல் நாளான இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு சாக்லேட் மற்றும் பூ கொடுத்து சிந்து மாணவர்களை வாழ்த்தி உற்சாகமாக வரவேற்று மாணவ மாணவி யர்களுக்கு விலையில்லா சீருடை மற்றும் புத்தகங்களை வழங்கினார் பின்னர் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை ஆய்வு மேற்கொண்டார் இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள் உஷாராணி கலைச்செல்வன் , சவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக