தாசரஹள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 ஜூன், 2026

தாசரஹள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆய்வு.


மொரப்பூர், ஜூன் 5:


அரூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட மொரப்பூர் ஒன்றியம், தாசரஹள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று (04.06.2026) மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்கான பொருட்களின் தரம் மற்றும் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார். மேலும், பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.


புதிய கல்வியாண்டை முன்னிட்டு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாணவர்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்து உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் மொரப்பூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


புதிய மாணவர்களை வரவேற்று கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்திய கல்வித்துறை அலுவலர்கள், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad