மசூதிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்கள் அபகரிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு !
வாணியம்பாடி, ஜூன்.16-
திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த வாணி யம்பாடி அருகே மசூதிகளுக்கு சொந்த மான பல கோடி ரூபாய் மதிப்பிலான வஃக்பு சொத் துக்கள் சட்டவிரோதமாக விற்பனை செய் யப்பட்டுள்ளதாக கூறி, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மா வட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது.திருப்பத்தூர் அடுத்த கருப்பனூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரும், மக்கள் சட்ட உரிமைகள் கழக மாநில ஆட்சிமன்றகுழு உறுப்பினரு மான வாஜித் என்பவர், மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.அந்த மனுவில், ஏழை எளிய மக்களின் பயன்பாட்டிற்காக இருக்க வேண்டிய மசூதி சொத்துக்கள் சிலரால் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு ள்ளதாகவும், இதுகுறித்து கடந்த 2025-ம் ஆண்டு முதல் பல்வேறு புகார்கள் அளித் தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் சொத்து அபகரிப்பு தொடர்பான முழு விவரங்கள் மற்றும் ஆதாரங்களை அளித்துள்ளதாகவும், புதிதாக பொறுப் பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் சார்பிலும் பொதுமக்களின் சார்பிலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம்
செய்தியாளர் மு.பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக