தேசிய குழந்தை குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி
திருச்செந்தூர் ஆர். சோயா தொண்டு நிறுவனம் சார்பாக இயங்கி வரும் மனநல காப்பகம் மற்றும் திருச்செந்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.
திருச்செந்தூர் மனநல காப்பகத்தில் தொடங்கி ரத வீதி வழியாக சென்று தொழிற்கல்வி வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி முடிவு அடைந்தது. இதனை திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
இந்தப் பேரணியில் திருச்செந்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் மதுரை வீரன், திருச்செந்தூர் போக்குவரத்து காவல்துறையினர், ஆர். சோயா தொண்டு நிறுவன துணை இயக்குனர் அபிஷா, ஆர். சோயா தன்னார்வலர் அஜித்குமார், ஆர் சோயா மகேஷ், தினேஷ் , அபிஷா ஜே எஸ் மற்றும் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரணியில் பங்கேற்றவர்களை தொழில் பயிற்சி நிலையத்தின் முதல்வர் அருள் வரவேற்று , குழந்தை கல்வியின் அவசியத்தை பற்றியும் , குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .
இறுதியாக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆர் சோயா இயக்குனர் சுரேஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக