தனது ஆண் நண்பரின் பிறந்தநாளைக் கொண்டாட போலீஸ் டி.எஸ்.பி. சீருடை யில் வந்த இளம்பெண் கைது ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 12 ஜூன், 2026

தனது ஆண் நண்பரின் பிறந்தநாளைக் கொண்டாட போலீஸ் டி.எஸ்.பி. சீருடை யில் வந்த இளம்பெண் கைது !

தனது ஆண் நண்பரின் பிறந்தநாளைக் கொண்டாட போலீஸ் டி.எஸ்.பி. சீருடை யில் வந்த இளம்பெண்  கைது ! 
வேலூர், ஜூன்.12- 

வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டை அகழியில்  தனது ஆண் நண்பர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக போலீஸ் டி எஸ் பி சீருடை அணிந்து வந்த பெண் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய் தனர் விசாரணையில் காவல்துறை அதிகாரி வேடமிட்டு வந்ததாக தெரிவித் தார் சென்னையைச் சேர்ந்த உமா மகேஸ்வரி (வயது 33) என்பவர், டி.எஸ்.பி. அதிகாரி சீருடை அணிந்து வேலூர் கோட் டைப் பகுதிக்கு வந்துள்ளார். அவரை ரோந்து பணியில் இருந்த போலீசார் பார்த்த போது,  உண்மையான  உயர் அதிகாரி என கருதி முதலில் சல்யூட் வைத்துள்ளனர். அப்போது தன்னை டி.எஸ்.பி. என அறிமுகப்படுத்திய உமா மகேஸ்வரியின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், தனது ஆண் நண்பரைக் கவரும் நோக்கில் போலீஸ் சீருடை அணிந்து சுற்றித் திரிந் தது தெரியவந்தது. மேலும், அவர் ஏற் கனவே சென்னையில் ஒரு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பதும் விசாரணையில் அம்பலமானது.
இதையடுத்து போலியாக போலீஸ் அதிகாரியாக நடித்த குற்றச்சாட்டின் பேரில் உமா மகேஸ்வரியை போலீசார் கைது செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.உயர் போலீஸ் அதிகாரி சீருடை அணிந்து வந்த இளம்பெண்ணுக்கு முதலில் சல்யூட் வைத்த போலீசார், பின்னர் அவரையே கைது செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad