கூலி தொழிலாளியை கத்தி காட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது ! போலீசார் விசாரணை !
ராணிப்பேட்டை , ஜுன் 25 -
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரபா கரன்(வயது 50). கூலி தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் பகல் பொன்னப் பந்தாங்கல் பகுதியில் இருந்து பாணா வரம் நோக்கி தனது இருசக்கர வாகனத் தில் சென்று கொண்டிருந்துள்ளார் அப் போதுஅவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென பிரபாகரனை வழிமறித்து உன்னிடம் இருக்கும் பணத் தை தருமாறு கேட்டுள்ளார். பிரபாகரன் தன்னிடம் பணமில்லை என்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, கையால் தாக்கி அவரின் பாக்கெட்டில் இருந்த 700- ரூபாய் பணத் தை பறித்து சென்றுள்ளார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு கத்தி கூச்சலிட்டுள்ளார்.. அவரின் சத்தத் தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த னர்.அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.இதுகுறித்து பிரபாகரன் பாணாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறை யினர்வழக்குபதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டகொள்ளையனை தேடி வந்தனர்.
இந்நிலையில் பாணாவரம் காவல் நிலைய ஆய்வாளர் நாகேந்திரன், உதவி
ஆய்வாளர் ரகு மற்றும்காவல்துறையினர் பாணாவரம். காட்டுமூளை சந்திப்பதில்
வாகன சோதளையில் நேற்று ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக
வேகமாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மடக்கி விசாரித்ததில்
முனனுக்க பின் முரணாக கூறியதால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர்
காவல்நிலையம் அழைத்து வந்து விசாரி த்ததில் சோளிங்கர் அடுத்த. பிள்ளையார் குப்பம் பகுதியைச் சேர்ந்த பரத் (வயது 23) என்பதும், இவர் நேற்று முன்தினம் பொன்னப்பந்தாங்கல் பகுதியில் பிரபா கரனை தாக்கி அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனம் ஒரு கத்தி உள்ளிட்வற்றை பறிமுதல் செய் தனர் . மேலும் இவர் மீது கஞ்சா வழக்கு உள்ளதும் இவர் ஓராண்டு காலமாக
தலைமறைவாக இருந்து வரும் பழைய குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து பாணாவரம் காவல் துறையினர் பரத் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து சோளிங்கர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர்மத்திய சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக