தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் கீழ நாலு மூலை கிணறு கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுடன் இணைந்த குன்று மலை சாஸ்தா கோவில் உள்ளது.
இந்தக் கோவிலில் விசேஷ நாட்கள் பௌர்ணமி மக பங்குனி உத்திரத்தன்று சிறப்பு வழிபாடு வெகு விமர்சியாக நடைபெறும்.
ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபா ஆராதனையுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான குன்று மலை சாஸ்தா பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அருள்மிகு குன்று மேல்லய்யன் சாஸ்தா கோவில் அன்னதான மண்டபத்தில் சேவா சங்கத்தினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்களுடன் சேவா சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக