ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் சேஷ்டாபிசேகம்.
ஸ்ரீவைகுண்டம் ஜூன் 29. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்றாவதான திருப்பதி ஸ்ரீவைகுண்டம்.
ஆண்டு தோறும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் உற்சவர் கள்ளப்பிரான் திருமேனி முழுவதும் கவசங்கள் படிகளையப்பட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
கவசங்கள் அறநிலைய துறை அதிகாரிகள் முன்னிலையில் சுத்தப்படுத்தி மீண்டும் பெருமாள் திருமேனியில் கவசங்கள் பொறுத்தப்படும். இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு விஸ்வரூபம். நித்தியல். 9.30 மணிக்கு கவசங்கள் பணிகளையும் பட்டது.
சிறப்பு திருமஞ்சனம் நடந்தது மாலை 4 மணிக்கு கவசங்கள் ஒப்படைக்கப்பட்டது. 5 மணிக்கு சாயரட்சை. 6.15 மணிக்கு தீபாராதனை. 7.15 மணிக்கு உற்சவர் கள்ளப்பிரான் உள் பிரகாரத்தில் இருந்து தன் இருப்பிடம் சென்றடைந்தார்.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ். வாசு. நாராயணன். ராமானுஜம் . சீனு ஸ்தலங்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். தேவரா ஜன். சீனிவாசன். திருவேங்கடத்தான்.
ஸ்ரீவேங்கடகிருஷ்ணன், வெங்கடேசன். அறங்காவலர்கள். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் மற்றும் எழத்தர் இசக்கி பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக