ஆம்பூர் அருகே விளைநிலங்களில் மீண்டும் புகுந்த யானை கூட்டம் விவசாயிகள் வேதனை !
வாணியம்பாடி, ஜூன்.23-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மீண்டும் விளைநிலங்களில் புகுந்த காட்டு யானை கூட்டம் பயிர்களை சேதப் படுத்தியதால், யானைகளை அடர் வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகம் ஊராட்சி சுட்ட குண்டா கிராமத்தில் விவசாயிகள் கும ரேசன், பக்தவச்சலம், தாமோதரன், விசுவ நாதன், ரத்தினவேல் ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலங்களில் நேற்று நள்ளிரவு 2 குட்டிகள் உட்பட 8 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த தென் னை, வாழை, மா மரக்கிளைகள், தீவன பயிர்கள், சொட்டு நீர் பாசன பைப்புகள் மற்றும் முள்வேலிகளை யானைகள் சேதப்படுத்தின.
தகவல் அறிந்த ஆம்பூர்வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானை கூட் டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக் கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர். கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் இரவு நேரங்களில் யானைகள் விவசாய நிலங் களில் புகுந்து சேதப்படுத்திய நிலையில், மீண்டும் அதே பகுதியில் யானைகள் புகுந்திருப்பது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.தற்போது யானைகள் கூட்டம் காரப்பட்டு காப்புக் காடு பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளது. மீண்டும் இரவு நேரங்களில் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவ சாய நிலங்களுக்கு வர வாய்ப்புள்ளதால், வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகள் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என ஆம்பூர் வனசரக அலு வலர் பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் யானைகள் நடமாட்டத்தை கண் காணிக்க வனத்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணி ப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக