கலவை நகர தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், பிறந்த நாள் விழா கொண்டாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 22 ஜூன், 2026

கலவை நகர தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், பிறந்த நாள் விழா கொண்டாட்டம் !

கலவை நகர தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், பிறந்த நாள் விழா கொண்டாட்டம் !
ராணிப்பேட்டை , ஜுன் 22 -
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசி னர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நகர தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், பிறந்த நாள் விழா  நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் பிரபாகரன், தலைமை தாங்கினார். நகர இணை செயலாளர் அருண்குமார், நகர மகளிர் அணி நிர்வாகிகள் வேதா, சுகு ணா , சௌமியா பிரபாகரன், துணைச் செயலாளர கணேசன் , நகர பொருளாளர் சுகேல் பாஷா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிரி, வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலா ளர் விஜய் மோகன், கலந்துகொண்டு மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.இதில் , முதல் பிறந்தநாள் முன்னிட்டு 52 பேர் ரத்த தானம் செய்தனர். மருத்துவ முகா மிற்கு 675 பேர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இந்த மருத்துவ முகாமில், ஆற்காடு நகர செயலாளர் வினோத், மற்றும் மாவட்ட , நகர கிளைக் கழக நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்த னர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பொது மக்களுக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. முடிவில்,விஷ்ணு, கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினர்.

 ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad