ஸ்ரீவைகுண்டம் ஜூன் 25 தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் முதலாவதான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் வஸந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஜூன் 18 ந்தேதி தொடங்கி வஸந்த உற்சவம் நடைபெறுவது. எட்டாவது நாளான நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 9 மணிக்கு திருமஞ்சனம். தொடந்து தீபாராதனை சாத்து முறை கோஷ்டி நடந்தது. மாலை 5 மணிக்கு சாயரட்சை 7 மணிக்கு உற்சவர் கள்ளப்பிரான் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் தோளுக்கினியானில் கொடிமரம் சுற்றி வஸந்த மண்டபம் எழுந்தருளினார்.
மண்டபத்தை சுற்றி தண்ணீரால் நிரப்பப்பட்டு உள்ளது. பின்னர் தீபாராதனை. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் அத்யாபகர்கள் சீனிவாசன் பார்த்த சாரதி. சீனிவாச தாத்தம். வைகுண்ட ராமன் ஆகியோர் சேவித்தனர். சாத்து முறை முடிந்து தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் உற்சவர் கள்ளப்பிரான் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் கோவில் தனதிருப்பிடம் சென்றார். இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ராமானுஜன்.சீனு. நாராயணன். ஸ்தலங்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். தேவராஜன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நிஷாந்தினி
அறங்காவலர் குழுத் தலைவர் அருணா தேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் பேக்கிரி முருகன் முத்துகிருஷ்ணன் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக