மது போதையில் கல் குவாரி குளத்தில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு போலீசார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 3 ஜூன், 2026

மது போதையில் கல் குவாரி குளத்தில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு போலீசார் விசாரணை !

மது போதையில் கல் குவாரி குளத்தில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு  போலீசார் விசாரணை !
வாணியம்பாடி, ஜூன்.3- 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முரளி (வயது 27). இவர் ஏலகிரி மலையில் உள்ள ஒரு போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்து வந்தார்.நேற்று அவரது நண்பர் பூவரசன் சென்னையிலிருந்து வந்ததாக கூறப்படு கிறது. பின்னர் இருவரும் ஏலகிரி மலை க்கு சென்று, அங்கிருந்து மீண்டும் முரளி யின் வீட்டருகே உள்ள மூடப்பட்ட கல்கு வாரி பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் மது அருந்திய நிலையில், முரளி கல்குவாரியில் தேங்கியிருந்த நீரில் குளிக்க இறங்கியுள்ளார். அப் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த பூவரசன், என்ன செய் வது என தெரியாமல் முரளியின் செல் போன் மற்றும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள் ளார்.
இதையடுத்து, முரளி வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் போலீசார் பூவரசனை பிடித்து விசார ணை நடத்தினர். அப்போது, இருவரும் மது போதையில் நீரில் இறங்கியதாகவும், முரளி நீண்ட நேரமாக மேலே வராததால் பயந்து அங்கிருந்து சென்று விட்டதாக வும் அவர் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கிராமிய போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சுமார் 10 மணி நேர தேடுதல் பணிக்குப் பிறகு, நீரில் மூழ்கிய முரளியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad