பள்ளி மாணவியை திருநீரு அணியக் கூடாது என்று அடாவடி செய்யும் அரசு பள்ளி ஆசிரியர் திட்டியதால் பெற்றோர் கள் கண்டனம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 ஜூன், 2026

பள்ளி மாணவியை திருநீரு அணியக் கூடாது என்று அடாவடி செய்யும் அரசு பள்ளி ஆசிரியர் திட்டியதால் பெற்றோர் கள் கண்டனம் !

 பள்ளி மாணவியை  திருநீரு அணியக் கூடாது என்று அடாவடி செய்யும் அரசு பள்ளி ஆசிரியர் திட்டியதால்  பெற்றோர் கள் கண்டனம் !

குடியாத்தம் ஜூன் 10
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதி யில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது  இதில் சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் மாணவி திருநீறு அணியக்கூடாது திருநீரை அழிக்குமாறு கூறிய அரசு பள்ளி ஆசிரி யருக்கு பெற்றோர்கள் கண்டனம் தெரிவி த்துள்ளனர்.பேர்ணாம்பட்டு வி கோட்டா சாலை சிவராஜ் நகர் பகுதியை சேர்ந்த வர்கள் வித்யா, கோபி  இவர்களது மகள் பேர்ணாம்பட்டு அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவியாக புதிதாக சேர்ந்துள்ளார் 
இந்நிலையில் காலை மாணவி வழக்கம் போல் போல் பள்ளிக்கு திருநீறு அணிந்து சென்றுள்ளார்  இதனை கண்ட உடற் கல்வி ஆசிரியர் லில்லி  மற்றும் ஆசிரியர் தீபா ஆகியோர் இவ்வாறு பள்ளிக்கு திருநீர் அணிந்து வரக்கூடாது ஏன் திருநீர் அணிந்து வந்தாய் என்றும் ஏளனமாக பேசி திருநீறை உடனடியாக அழிக்குமாறு மாணவியை வற்புறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து மனைவி பெற்றோர்களுக்கு தெரிவித்தவுடன் பெற்றோர்கள் பள்ளி க்கு வந்து  பாகுபாடு இன்றி நடைபெறும் அரசு பள்ளியில் மத அடையாளங்கள் அணிந்து வரக்கூடாது என்று சட்டம் ஏதேனும் உள்ளதா என்று தலைமை ஆசிரியரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அதற்கு தலைமை ஆசிரியர் 
ஆசிரியர்கள் அவ்வாறு கூறவில்லை என்றும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து சமாளித்துள்ளனர் மேலும் இதுபோன்று நடக்காது என்றும் உறுதி யளித்து அனுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்துமீண்டும் மாணவி நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு திருநீர் அணிந்து சென்றுள்ளார் அப்போது காலை கூட்டத்தில் சக மாணவிகள் முன்னிலையில் ஆசிரியர்கள் முகத்தை பாரு மொகர கட்ட தலைமை ஆசிரியரிடம் கூறிவிட்டால் நீ பெரிய ஆளா இவ்வாறு மீண்டும் திருநீறு அணிந்து வரக்கூடாது என்று ஏளனமாக பேசி உள்ளனர்.
மாலையில் வீடு திரும்பிய மாணவி நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்து நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறிய அழுது உள்ளார்.மாணவிக்கு மத அடையாளங்கள் அணிந்து செல்ல தடை ஏற்படுத்தி மற்றும் காலை கூட்டத்தில் சக மாணவர்கள் மத்தியில் அசிங்கம் படுத் திய ஆசிரியர்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் பெற்றோர்களும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad