கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய போதை ஆசாமிகளை கைது செய்ய கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் !
குடியாத்தம் , ஜூன் 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் ஜிட்டபள்ளி கிராமத்தில் வசித்து வந்த நாகபூஷணம் த/பெ தங்கராஜ், கமல்ராஜ் த/பெ கணேசன் ஆகியோர் சேர்ந்து நேற்று இரவு 14/06/2026 சேம்பள்ளி கிராமம் MGR நகரைச் சேர்ந்த விக்னேஷ் த/பெ சண்முகம் என்பவரை கஞ்சா போதையில் அடித்தும், காதை அறுத்தும் உள்ளனர் இந்நிலையில் விக்னேஷ் என்பவரின் நண்பர்கள் மற்றும் உறவின ர்கள் மற்றும் சில ஊர் பொதுமக்கள் சேர்ந்து நாகபூஷணம் மற்றும் கமல்ராஜ் என்பவர்களை சேர்ந்து அடித்துள்ளனர். இதில் பலத்த காயங்களுடன் நாக பூஷனம் என்பவரை வேலூர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ள்ளனர். விக்னேஷ் என்பவரை குடியாத் தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று 15/6/2026 மாலை சுமார் 4:30 மணி அளவில் வேலூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த நாகபுஷனம் என்பவர் இறந்துள்ளார் மேலும் இறந்த நபரின் உடலானது உடல்கூறு ஆய்விற் காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கிராம விசாரணையில் இறந்த நபருக்கு புவனே ஸ்வரி என்கிற மனைவியும் ஐந்து வயது குழந்தையும் உள்ளனர் என தெரிய . வருகிறது நாகபூஷணம் என்பவரின் இறப்பிற்கு காரணமாக இருந்த நபர் களை கைது செய்யுமாறு உப்பரப்பள்ளி காலனி சேர்ந்த பொதுமக்கள் மாலை 5.40 மணி முதல் 6.00 மணி வரை சேம்பள்ளி - உப்பிரபல்லி சாலையில் மேம்பாலம் அரு கில் சாலை மறியல் ஈடுபட்டு வந்தனர் காவல்துறையினர்க்கு தகவல் தெரிவிக் கப்பட்டு காவல்துறையினரும் சம்பவ இடத்தில் வந்து சாலை மறியலில் ஈடு பட்ட வந்த நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சாலை மறியல் ஈடுபட்ட 5 நபர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சாலை மறியலில் சுமார் 150 மக்கள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் 120 பெண்கள் 30 பேர் இருந்தனர். தற்பொழுது போக்குவரத்து சரி செய்யப்பட்டு சாலை மறியல் கை விடப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக