ஏராளமான திருச்சபை பிள்ளைகள் கலந்து கொண்டு சிறப்பு ஜெபங்கள் ஏறெடுத்தனர். ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பாகவும் பெண்கள் ஐக்கிய சங்கம் சார்பாகவும் வாலிப ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பாகவும் வாலிப பெண்கள் ஐக்கிய சங்கம் சார்பாகவும் சுற்றுச்சூழல் குழு உருவாக்கப்பட்டது.
ஆலய வளாகத்திலும், ஊர் முழுவதும் மரக்கன்று நடவும் பராமரிப்பு செய்யவும் தீர்மானம் செய்யப்பட்டது. வருகின்ற நிதியாண்டுக்குள் பனை விதைகள் திரளாக சேகரிக்கவும், உரிய இடங்களில் மழைக்காலத்திற்கு முன், முறையாக விதைக்கவும் தீர்மானம் செய்யப்பட்டது.
முதல் கட்டமாக ஆராதனையை தொடர்ந்து, ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பாகவும், பெண்கள் ஐக்கிய சங்கம் சார்பாகவும், ஆலய வளாகத்தில் மரங்கள் நடப்பட்டது.
மேலும் பங்குபெற்ற அனைவருக்கும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுப்புற சூழல் துறையின் சார்பாக பழமரக்கன்றுகளை சேகர குருவானவர் அருட்திரு G. பாஸ்கரன் இலவசமாக வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக