பெண் குழந்தைகளைக் காப்போம் திட்டம் 10 தாய்மார்களுக்கு குழந்தை நல பெட்ட கம் வழங்கிய மாவட்ட ஆட்சியர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 ஜூலை, 2026

பெண் குழந்தைகளைக் காப்போம் திட்டம் 10 தாய்மார்களுக்கு குழந்தை நல பெட்ட கம் வழங்கிய மாவட்ட ஆட்சியர் !

பெண் குழந்தைகளைக் காப்போம் திட்டம் 10 தாய்மார்களுக்கு குழந்தை நல பெட்ட கம் வழங்கிய மாவட்ட ஆட்சியர் ! 
குடியாத்தம் அரசு தலைமை மருத்துவ மனையில் நிகழ்சி !
குடியாத்தம், ஜூலை 8-
வேலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைக ளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் "பெண் குழந்தைகளைக் காப் போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப் போம்" திட்டத்தின் கீழ், பெண் குழந்தை களை பேணிக் காக்கும் விதமாக 10 தாய் மார்களுக்கு குழந்தை நல பெட்டகங்கள் வழங்கும் நிகழ்சி நடைபெற்றது.
குடியாத்தம் அரசு தலைமை மருத்துவ மனையில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ்,இ.ஆ.ப. தலைமை தாங்கி பெட்டகங்களை வழங்கினார் இதில் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து அழகப்பன் கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.தென்றல் குமார் வட்டாட்சியர் பிரியா நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி மாவட்ட சமூக நல அலுவலர்  ஆர்.உமா, இணை இயக்கு நர் (மருத்துவ பணிகள்) மரு.சிவக்குமார், முதன்மை மருத்துவ அலுவலர் மரு. மஞ்சு நாதன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர் கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெண் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஆட்சியர் தெரிவித்தார் மேலும் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு சிகிச்சைக்காக வந்திருந்த பயனாளி களிடம்  மாவட்ட ஆட்சியர் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad