கர்மவீரர் காமராசர் 124-வது பிறந்தநாள் விழா: மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி, பரிசுகள் வழங்கல் !
கலவை, ஜூலை 17 -
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை நல்லூ ரில் செயல்பட்டு வரும் சித்தார்த்தர் இலவச இரவு பள்ளி சார்பில், கர்மவீரர் காமராசர் அவர்களின் 124-வது பிறந்த நாள் விழா நேற்று மாலை 6.30 மணியள வில் சிறப்பாக நடைபெற்றது.ஜெய் பீம் இரவு பள்ளி கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, புத்த வந்தன சிறப்பு வழிபாட்டுடன் தொடங்கியது. இரவு பள்ளி நிறுவனர் பி. ராஜசேகர் மீனாட்சி தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற செயலாளரும், ஊர் நாட்டாமையுமான கே. ராஜேந்திரன் கலந்து கொண்டு, கர்மவீரர் காமராசரின் கல்விப் பணிகள் மற்றும் சமூக சேவை களை நினைவுகூர்ந்து பேசினார். விழா வையொட்டி மாணவ–மாணவிகளுக்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத் தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி பாராட்டினர்.நிகழ்ச்சியில் இரவு பள்ளி பொறுப்பாளர் ஆர். சாம்ராஜ், தன்னார்வலர்கள் ஆர்.மீனாட்சி ராஜ சேகர்.ஆர். ருக்கேஷ் மற்றும் மாணவர் கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண் டனர்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக