குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா குடியாத்தம் ரோட்டரி சங்க 2026-27 ஆண்டு !
குடியாத்தம் , ஜுலை 2 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா குடியாத்தம் ரோட்டரி சங்க 2026 27 ஆண்டின் முதல் நிகழ்வாக தட்டப்பாரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று கள் நடும் விழா 1-7 2026 புதன்கிழமை காலை 10 மணி அளவில் தட்டப்பாரை அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது சங்கத்தின் தலைவர் ரொட் டேரியன் டி எஸ் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு சி கிஷோர் குமார் வரவேற்பு ரை ஆற்றினார்.சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ஜே கே என் பழனி கலந்து கொண்டார்
சங்க உறுப்பினர் பசுமை நாயகர் டி ராஜேந்திரன் தனது பிறந்த நாளை ஒட்டி சுமார் ரூபாய் 10 ஆயிரம் மதிப்பில் 130 மரக்கன்றுகள் மற்றும் காய்கறிச் செடி களை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் என் சத்தியமூர்த்தி,சி கே வெங்கடேசன், ரங்கா வாசுதேவன்மற்றும் உறுப்பினர்கள் எம் ஆர் மணி,சி.பி மகாராஜன் இளைஞர் நலன் இயக்குனர் எம் டி பிரவீன் பாபு, ஜம்புலிங்கம், அருண் குமார், ஜெயக்குமார், பசுமை படை ஆசிரி யர் சுபாகர், ஊர் பிரமுகர்கள் சாமிநாதன், தேவராஜ், ஆசிரியப் பெருமக்கள் ,என் எஸ் எஸ் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் என் எஸ் எஸ் திட்ட அலுவலர் ஜெனிவா நன்றியுரை ஆற்றினார்.சங்க செயலர் ஜெ. தமிழ்ச் செல்வன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக