குடியாத்தம் ஜோகி மேடம் மசூதிக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்தல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 ஜூலை, 2026

குடியாத்தம் ஜோகி மேடம் மசூதிக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்தல் !

குடியாத்தம் ஜோகி மேடம் மசூதிக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்தல் 
குடியாத்தம் , ஜூலை 2 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தாழையாத்தம் ஊராட்சி ஜோகி மடம் பகுதியில் புதிய பைபாஸ் சாலையில் 36 மசூதிகளுக்கு சொந்தமான இடுகாடு 1.37 ஏக்கர் பரப்பளவு பரப்பளவு கொண்டது
இந்த நிலையில் அந்த இடத்தில் தனி நபர்கள் பலவருடங்களாக ஆக்கிரமிப்பு செய் துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மசூதி நிர்வாகம் குடியாத்தம் வருவாய் துறையினரிடம் புகார் அளித் தனர். அதில் தங்களுக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து தரும்படியும், சிறுபான்மை நலத்துறை சார்பாக இடு காட்டுக்கு சுற்றுசுவர் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என தெரிவித்திருந்தனர். இதனையடுத்து கடந்த 20 ஆம் தேதிய ன்று சுமார்  50க்கும் மேற்பட்ட குடியாத்தம் டவுன் போலீசார் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் அளவீடு செய்யும் பணி யினை மேற்கொண்டனர். 
அப்போது இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்ட தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது இதனையடுத்து இஸ் லாமியர்கள் கொடுத்த மனுவின் அடிப் படையில் அளவீடு செய்துள்ள நிலையில் பின் வரும் நாளில் போலீஸ் பாதுகாப்பு டன் அளவீடு செய்து தரப்படும் எனவும்,  
கோட்டாட்சியர் தலைமையில்ல் பேச்சு வார்த்தை நடைபெறும் என அதிகாரிகள்  தெரிவித்திருந்தனர். அதன்படி நேற்று சப் கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் வரு வாய் துறையினர் குடியாத்தம் டவுன்  போலீசார் பாதுகாப்புடன் ஆக்ரமிப்பில் இருந்து மீட்ட மசூதிக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து  ஜெ.சி.பி இயந்திரங்கள் உதவியுடன் சுற்றுசுவர் பணிக்கு நேற்று அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கினர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad