திருவண்ணாமலை அடி அண்ணாமலை யார் கோயில் மகா கும்பாபிஷேகம் விமர்சையான கொண்டாட்டம் !
திருவண்ணாமலை மாவட்டம் உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் அடிமுடி தேடிய சிவத்தலமான, கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி அருணாச்சலேஸ்வரர் (அடி அண்ணாமலையார்) திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை பல்லாயிர க்கணக்கான பக்தர்கள் சூழ மிக விமர் சையாகவும், சாஸ்திரோக்தமாகவும் நடைபெற்றது.இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாக புனித நீர் அடங்கிய கலசங்கள் வைக்கப்பட்டு, வேத விற்பன்னர்களால் பிரம்மாண்ட யாகசாலை பூஜைகள் மற்றும் விசேஷ ஹோமங்கள் நடத்தப்பட்டு வந்தன இன்று காலை நான்காம் காலயாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, மங்கள வாத்தி யங்கள் முழங்க கடம்புறப்பாடு நடை பெற்றது. இதனை தொடர்ந்து, வேத மந்திரங்கள் மற்றும் அண்ணாமலை யாருக்கு அரோகரா!" என்ற பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே, ராஜ கோபுரம் மற்றும் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷே கம் மிக விமரிசையாக நடத்தப்பட்டது.
கும்பாபிஷேகத்தை அடுத்து, மூலவர் ஆதி அருணாச்சலேஸ்வரர் மற்றும் அபிதகுஜாம்பாள் சமேத மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த ஆன்மீக வரலாற்று நிகழ்வைக் காண திருவண்ணாமலை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலப் பாதையில் திரண்டிருந்தனர். கும்பாபிஷேகம் முடிந்தவுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் -T.R.கலையரசு
தொடர்புக்கு :8678944230
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக