நாசரேத், நகர வணிகர் சங்கத்தின் 26வது ஆண்டு விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 ஜூலை, 2026

நாசரேத், நகர வணிகர் சங்கத்தின் 26வது ஆண்டு விழா.

நாசரேத், நகர வணிகர் சங்கத்தின் 26வது ஆண்டு விழா ஜோதி மாளிகையில் 26.07.2026 அன்று நடைபெற்றது.

தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்வில், மறைந்த சங்க நிர்வாகி VSR குழுமங்களின் நிறுவனர் VS ராமச்சந்திரனுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ஜெபஸ் திலகராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வன், பொருளாளர் அகிலன், துணை செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். பொறியாளர் வே. இரஞ்சன் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர், ENTRANS INC NEW JERSEY(USA) மென் பொருள் நிறுவன தலைவர் ஜெகன் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாசரேத் நகர வணிகர் சங்கம் சார்பில், பாதுகாப்பு வசதிகளுக்காக அமைக்கப்பட்ட சிசிடிவி கண்ட்ரோல் பேனல் சேவையினை காவல் ஆய்வாளர் வனசுந்தர் இடம் ஒப்படைத்தனர்.

வாழ்த்துரை வழங்கிய மோகன்சிங் பேசுகையில் தொழில் வளம் பெருகினால் மட்டுமே வணிகம் பெருகும் என்று கூறினார். நாசரேத் நகரில் புதியதாக துவங்க உள்ள சுபஶ்ரீ ஜூவல்லர்ஸ் நிறுவனத்தினர் சங்கத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர் ஜெகன் செல்வராஜ் பேசும் போது மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ அப்துல் கலாமின் கனவை நினைவாக்கும் விதமாக செயல்பட்டு, தன்னுடைய தகவல் தொழில்நுட்ப துறையில் 2020 இல் சுமார் 600 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கி வைத்துள்ளதை விளக்கினார்.
செயலாளர் வே.செல்வன் 26 ஆம் சங்க ஆண்டு விழா மலரை வெளியிட்டார். பின்னர் பொது குழு கூட்டமும் வணிகர் சங்க வளர்ச்சிக்கான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலாவதாக நாசரேத் நகருக்கு நவீனப்படுத்தப்பட்ட 24 மணி நேரமும் இயங்கும் அரசு மருத்துவமனை வேண்டும் என்றும், இரண்டாவதாக நாசரேத்தை மையமாகக் கொண்டு  நீதிமன்றம் வேண்டும் என்றும், மூன்றாவதாக நாசரேத் நகருக்கு வந்து கொண்டிருந்து, காரணம் இன்றி நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கிட கேட்டும், நான்காவதாக நாசரேத் முதல் குரும்பூர் வரையிலான சாலையை அகலப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்து தர வேண்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் PRO பேச்சிமுத்து தங்களது மருத்துவமனையில் சலுகை அடிப்படையில் கண் சிகிச்சை வழங்க டோக்கன் வழங்கினார்.

நாசரேத் நகரை சுத்தமும், சுகாதாரமாக வைத்து வரும் தூய்மை காவலர்களுக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டு தெரிவித்து வணிகர் சங்க உறுப்பினர்கள் கடையில் தேவையான பொருட்களை வாங்கிட கூப்பன் வழங்கினர். விழா நிறைவில் கிருஷ்ணராஜ் நன்றி கூறினார். அனைவரும் நாட்டுப்பண் பாட விழா நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியினை பாபு செல்வன் தொகுத்து வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad