தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு நல்ல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 20 லட்சம் மதிப்பீட்டில் ஏழை எளியவர்களுக்ககு வழங்கப்பட்டதுபாதுகாப்பிற்காக போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு குறைபா டால் நலத்திட்ட உதவிகளை வாங்க வந்த பொதுமக்கள் முண்டியடித்து வாங்கிச் செல்லும் அவலம்-திணறிய கட்சி நிர்வா கிகள் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆடிட்டர் பூபாலன் நந்தகுமாரி ஏற்பாட்டில் நடைபெற்றது
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட பொறுப்பாளரும் கைத்தறி துணி நூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கு நல்ல திட்ட உதவிகளை வழங்கினார் மேலும் 2 கிலோ மீட்டர் தூர த்திற்கும் மேலாக சாலையின் இரண்டு பகுதிகளில் த.வெ.க கட்சி கொடிகளை கட்டி வைத்து பிரம்மாண்டமான மேற் கூறையுடன் கூடிய அரங்கம் அமைத்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு டைலரிங் மிஷின் வெல்டிங் மிஷின் ஊனமுற்றோருக்கு வீல் சேர் கட்டிட தொழிலாளர்களுக்கான மண்வெட்டி தக்காரி கொள்ளர் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் கால்நடை விவ சாயிகளுக்கு பால் கேன் வேஷ்டி சேலை உள்ளிட்ட 20 லட்சம் மதிப்பிலான நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு போதிய போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடாததால் நல திட்ட உதவிகளை வாங்க குவிந்த பொது மக்கள் முண்டி அடித்துக் கொண்டு பொருட்களை அள்ளி சென்றதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் திணறினர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளுக்கு மிகப்பெரிய வரவேற்பு தந்த பொதுமக்களுக்கு நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக