வேலூர் மாவட்டம் எருக்கம்பட்டு கிராமத் தில் அரிய பிரம்ம கமலம் மலர்ந்தது பக்தர்கள் பரவசம் !
குடியாத்தம் , ஜூலை 5 -
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பக்தாச்சாரி அவர்களின் இல்லத் தில், நள்ளிரவு அரிய வகை பிரம்மகமலம் மலர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இரவில் மட்டுமே முழுமை யாக மலர்ந்து, மறுநாள் காலை வாடி விடும் தனிச்சிறப்பு கொண்ட இந்த மலர், ஆண்டு தோறும் மலர்வது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது. இதன் நறுமணமும், வெண்மையான அழகிய இதழ்களும், மலரை காண வந்தவர்களை வெகுவாகக் கவர்ந்தன.பிரம்ம கமலம் மலர்ந்த தகவல் அப்பகுதியில் வேகமா கப் பரவியதைத் தொடர்ந்து, உறவினர் கள், அண்டை வீட்டார் மற்றும் பொது மக்கள் பக்தாச்சாரி அவர்களின் இல்லத் திற்கு வந்து மலரை தரிசித்து மகிழ்ந்த னர் . பலர் இறைவனின் அருளாகக் கருதி தீபம் ஏற்றி வழிபாடு செய்ததுடன், மலரின் அழகை புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும் பதிவு செய்தனர்.
பிரம்ம கமலம் நல்ல அதிர்ஷ்டம், செழிப்பு, அமைதி மற்றும் இறையருளின் அடை யாளமாகப் பலரால் நம்பப்படுகிறது. எனவே, இந்த அரிய மலர் மலர்ந்தது அந்தக் குடும்பத்தினருக்கும், கிராம மக்களுக்கும் மகிழ்ச்சியையும் ஆன்மிக உணர்வையும் ஏற்படுத்தியது. இயற் கையின் அபூர்வ அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் பிரம்ம கமலத் தின் மலர்ச்சியை நேரில் கண்டவர்கள், "இந்த அரிய காட்சியை காணும் வாய்ப்பு கிடைத்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக