செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் அதிரடி ஆய்வு ரூ 6.26 கோடி மதிப்பிலான வளர்ச் சித் திட்டப் பணிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் சரிபார்ப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 ஜூலை, 2026

செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் அதிரடி ஆய்வு ரூ 6.26 கோடி மதிப்பிலான வளர்ச் சித் திட்டப் பணிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் சரிபார்ப்பு!

செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் அதிரடி ஆய்வு ரூ 6.26 கோடி மதிப்பிலான வளர்ச் சித் திட்டப் பணிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் சரிபார்ப்பு!
செங்கம், ஜூலை 8 -
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. வந்தனா கார்க்,  அவர்கள் செங்கம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசுத் திட்டங்கள், கட்டுமானப் பணிகள் மற்றும் பொதுச் சேவைகள் குறித்து நேரில் சென்று விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார்.
ரூ.6.26 கோடியில் கட்டுமானப் பணிகள் ஆய்வு மேல் பென்னாத்தூரில் ரூ.1 கோடி யே 26 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு ள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தை ஆட்சித்தலைவர் பார்வையிட் டார். தொடர்ந்து, செங்கம் நகராட்சியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பள்ளிகள் மற்றும் அங் கன்வாடியில் திடீர் ஆய்வு மண்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பாய்ச்சல் அங்கன்வாடி மையத் திற்குச் சென்ற ஆட்சித்தலைவர், வகுப்பறைகளுக்கு நேரில் சென்று குழந்தைகளின் கற்றல் தரம் மற்றும் வாசிப்புத் திறனை நேரிடையாகக் கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும், மண்மலை ஊராட்சி சத்துணவு மையத் தில் உணவு தயாரிக்கும் முறை, தரம் மற்றும் உணவுப் பொருட்களின் இருப்பு குறித்து சரிபார்த்தார்.பொது விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் பாய்ச்சல் பகுதியில் உள்ள நியாய விலைக்கடை யில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்ததோடு, மேல்பென்னாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தினசரி செயல்பாடுகள் மற்றும் மருந்துப் பொருட் களின் இருப்பு நிலவரத்தையும் கேட்டறிந் தார்.வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் இ-சேவை மையம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு இ-சேவை மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சித்தலைவர், அலுவலகப் பதிவேடுகளைச் சரிபார்த்தார். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீதான நடவடிக்கைகள் மற்றும் நிலுவை விவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி: இறுதியாக, செங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மக்கள் தொகை கணக் கெடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார் வையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சி முகாமிற்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.இந்த ஆய்வுகளின் போது உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள்உடனிருந்தனர்

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் T.R.கலையரசு 
செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு:8678944230

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad