82 பயனாளிகளுக்கு ரூ.1.கோடியே 14 லட்சத்து 64 ஆயிரத்து 977 மதிப்பிலான நல திட்டங்களை வழங்கிய ஆட்சியர் !
குடியாத்தம், ஜூலை 8 -
வேலூர் மாவட்டம். குடியாத்தம் வட்டம், உள்ளி ஊராட்சி, தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப. 82 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 இலட்சத்து 64 ஆயிரத்து 977 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி மாற்றுத்திறனாளிகள் சார்பில் 10 பயனாளிகளுக்கு 5.3.13.860/பேட்டரி யால் இயங்கும் மூன்று சக்கர சைக்கிள் செயற்கை அவையம் செவித்திறன் கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி களை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து அழகப்பன். கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.தென்றல்குமார் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் த.ராஜராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட சமூக நல அலுவலர் ஆர்.உமா, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி எஸ்.சுபலட்சுமி.வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் வருவாய் ஆய்வாளர் புகழரசன் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி உள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வி.ஜெய்சங்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் குடியாத்தம் வட்டாட்சியர் பிரியா நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக