ரூ 86.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள 5 வகுப்பறைகள். வேலப்பாடி வி.கே.வி.எம். அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் கட்டிடங்கள் திறப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 ஜூலை, 2026

ரூ 86.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள 5 வகுப்பறைகள். வேலப்பாடி வி.கே.வி.எம். அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் கட்டிடங்கள் திறப்பு !

ரூ 86.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள 5 வகுப்பறைகள். வேலப்பாடி வி.கே.வி.எம். அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் கட்டிடங்கள் திறப்பு !
வேலூர் , ஜூலை 30 -
வேலூர் மாவட்டம் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர்  ம. விஜய் பாலாஜி, அவர்கள் இன்று (30.07.2026) சின்ன அல்லாபுரம் மாநகராட்சி நடு நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.86.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள 5 வகுப்பறைகள். வேலப்பாடி வி.கே.வி.எம். அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ரூ.20 இலட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவறை கட்டிடம் மற்றும் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் மூஞ்சூர்பட்டு கிராம ஊராட்சியில்ரூ.16.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கான கல்வெட்டினை திறந்து வைத்தார். இந்ந நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்  பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப. வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.ம.வினோத் கண்ணன், காட்பாடி சட்ட மன்ற உறுப்பினர் மரு ம.சுதாகர் கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.தென்றல் குமார், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சுகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  ஆர்.பிரேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad