குடியாத்தம் நகராட்சி கூட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர் நகராட்சி ஆணையரை கண்டித்து நகர மன்ற தலைவர் உறுப்பி னர்கள் வெளிநடப்பு !
குடியாத்தம், ஜூலை 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 36 வார்டு கொண்ட நகராட்சியில் நகராட்சி ஆணை யராக தனலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக குடியா த்தம் நகராட்சியில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சியும் நகர மன்ற தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை.கடந்த திமுக ஆட்சி யில் பொதுமக்களின் அடிப்படை வசதி களை செய்து முடித்த எந்த ஒரு நிதி யையும் வழங்கவில்லை என்றும்நகராட்சி ஆணையர் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும் அதுமட்டுமின்றி குடியாத் தம் ஒன்பதாவது வார்டில் போடப்பட்ட சிமெண்ட் சாலை கடந்த திமுக ஆட்சி யில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அமலு அவர்களின் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டு போடப்பட்ட சாலையை தற்போது தமிழக வெற்றி கழகத்தின் குடியாத்தம்சட்டமன்ற உறுப்பினர் சிந்து அவர்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிமெண்ட் சாலையை போட்டதாக பொதுமக்களிடம் பொய்யான தகவலை கூறியது கண்டிக்க த்தக்கது என்றும் இதனால் இன்று குடியா த்தம் நகர மன்ற கூட்டத்தில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும்குடியாத்தம் நகராட்சி ஆணையரை கண்டித்து நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் தலை மையில் அனைத்து நகர மன்ற உறுப்பி னர்களும் வெளிநடப்பு செய்தனர். இதனால் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக