திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் ஜூலை மாதம் முதல் வெள்ளிக்கிழமை யான இன்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கொழுந்தட்டு பங்குத்தந்தை பீட்டர் பாலு தலைமை வகித்து திருப்பலி யை நிகழ்த்தினார்.
இதில் நொச்சிக்குளம் அருட்தந்தை ரத்தினராஜ் ,'இருதய அரசர் தான் நமக்கு எல்லாமே வழி நடத்துகிறார் ' உள்ளிட்ட சிறப்பு மறையுரை நிகழ்த்தினார். இதில் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் உட்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதியம் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்குத்தந்தை சூசை ரத்தினம் , திருத்தல நிதி குழுவினர், பங்கு இறை மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக