காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 ஜூலை, 2026

காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் !

காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் !
குடியாத்தம் , ஜூலை 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் திருமுருகன் திருமண மண்டபத்தில், மகிழ் அறக்கட்டளை சார்பாக பெருந் தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர் களின் 124-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அரசு பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புத் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியர்கள் மகிழ் அறக்கட்டளை சார்பில் பாராட்டப்பட்டு நினைவுப் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் தலைவர்  பொன்னரசன் அவர்கள் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் செயலாளர்  மோகன், பொருளாளர் பார்த்திபன், மற்றும் செயல் தலைவர்   விக்னேஷ் ஆகியோர் நிகழ்ச்சி யை ஒருங்கிணைத்து சிறப்பாக தொகுத்து வழங்கினர். மேலும், அறக் கட்டளை உறுப்பினர்களான  மணி மாறன், மோகன், யுவன்சங்கர், ஜெயக் குமார்,  சங்கர் மற்றும் முரசொலி ஆகி யோர் நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடு களையும் சிறப்பாக மேற் கொண்டு விழா வெற்றிகரமாக நடைபெற உறுதுணை யாக இருந்தனர்.
குறிப்பு: கல்விச் சேவையுடன், மண்ணின் இளம் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் உயரிய நோக்கத்துடன் மகிழ் அறக்கட்டளை தொடர்ந்து பல்வேறு சமூக நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த நற்பணி பொதுமக்களி டையே பெரும் வரவேற்பையும் பாராட்டை யும் பெற்றுள்ளது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad