சென்னையைச் அகர்வால் அறக்கட்டளை சார்பில் டி.சி.டபிள்யூ லிமிடெட் வளாகத்தில் செயற்கை கால் அளவீடு முகாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 ஜூலை, 2026

சென்னையைச் அகர்வால் அறக்கட்டளை சார்பில் டி.சி.டபிள்யூ லிமிடெட் வளாகத்தில் செயற்கை கால் அளவீடு முகாம்.

சென்னையைச் சேர்ந்த SC அகர்வால் அறக்கட்டளை, சாகுபுரம் டி.சி.டபிள்யூ லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, டி.சி.டபிள்யூ லிமிடெட் வளாகத்தில் செயற்கை கால் அளவீடு முகாமை நடத்தியது.

 இந்நிகழ்ச்சியை, எஸ். சி. அகர்வால் அறக்கட்டளையின் முகாம் அமைப்பாளர் திரு என்.வி. சம்பத், ஒருங்கிணைப்பாளர்களான சஞ்சீவ் அகர்வால் மற்றும் ஜான் வில்லியம்ஸ் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். 

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ அங்காள அகிலாண்டேஸ்வரி அமைப்பை சேர்ந்த ஜே. சந்திர மௌலி கலந்துகொண்டார். டி.சி.டபிள்யூ லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் எஸ். சுரேஷ், இந்த அளவீடு முகாமைத் தொடங்கி வைத்தார். 

செயற்கை கால் பொருத்துவதற்காக 70 பயனாளிகள் தங்களது அளவுகளை வழங்கினர். டி.சி.டபிள்யூ லிமிடெட் நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் திரு சீனிவாசன் அவர்களின் வழிகாட்டலின் பேரில் மக்கள் தொடர்புத் துறை இந்த முகாமை ஏற்பாடு செய்திருந்தது.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad