இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, மாவட்ட அறிவியல் அலுவலர் லெனின் அவர்கள் ஒத்துழைப்புடன், சிவராம் கலைக்கூடம் (இளம் சாதனையாளர்கள்), திருநெல்வேலி ஆசிரியர் மகாராஜன் தலைமையில் 50 மாணவர்கள் இணைந்து 125 அடி நீளமுள்ள துணியில் வனங்கள், புலிகள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தும் ஓவியங்களை வரைந்து, மாவட்ட அறிவியல் மையத்தில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தியுள்ளனர்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ,ஓவியம் வரைந்த மாணவ மாணவிகளுக்கு சூழல் மேம்பாட்டு அலுவலர் S.ஹேமலதா சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் அம்பாசமுத்திரம் சூழல் சரக உதவி வன உயிரினக் காப்பாளர் அன்னக்கொடி, திருக்குறுங்குடி சூழல் சரக உதவி வன உயிரினக் காப்பாளர் சரவணன் மற்றும் பாபநாசம் சூழல் சரக உதவி வன உயிரினக் காப்பாளர் சக்தி பிரசாத் கதிர்காமன் மற்றும் வனக்காப்பாளர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அம்பாசமுத்திரம் சூழல் சரக வனவர் நாகராஜ் , களக்காடு சூழல் சரக வனவர் கருணாகரன் மற்றும் பாபநாசம் சூழல் சரக வனவர் செண்பகம் செய்திருந்தனர்.
இந்த பிரம்மாண்ட ஓவிய நிகழ்வு, இயற்கை வளங்கள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பின் அவசியத்தை சமூகத்திற்கு எடுத்துரைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக